மறைந்த டாக்டர் சேதுவிற்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..! குட்டி சேதுவின் வருகையால் மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பம்…!

3 August 2020, 9:43 pm
Quick Share

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த சேது ஒரு மருத்துவர், இவர் அந்த வெற்றி படத்திற்கு பிறகு வாலிப ராஜா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே, நடிப்பிற்க்கு Good Bye கூறிவிட்டு தனது மருத்துவ வேலையை பார்க்க ஆரம்பித்தார்,

அதன் பிறகு மீண்டும் சந்தானம் அழைத்ததன் காரணமாக சக்க போடு போடு ராஜா படத்தின் செகண்ட் ஹீரோவாக நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படமும் வெற்றி பெறவில்லை.

இவரின் யூ ட்யூப் சேனல் பேட்டிகள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் பிரபலம். ஆனால் 5 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்ததால் சேது அவர்களே மீண்டும் மறுபிறவி எடுத்து நமக்கு மகனாக பிறந்ததாக சேதுவின் குடும்பம் சந்தோஷத்தில் இருக்கிறது.

Views: - 14

0

0