ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்; இயக்குனர் பா ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு!
Author: Prasad14 July 2025, 7:50 pm
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வேட்டுவம்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம் பகுதியில் இத்திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதாவது காரில் பறந்தபடி ஸ்டண்ட் செய்யும் ஒரு காட்சியில் மோகன் ராஜ் என்ற ஸ்டண்ட் கலைஞர் தவறி கீழே விழுந்தார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பா ரஞ்சித் மீது அலட்சியமாக செயல்பட்டது உட்பட 3 பிரிவுகளின் கிழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பா ரஞ்சித்துடன் ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
