காரியம் ஆகணும்னா கால்ல விழுவாரு விஜய்.. இப்ப மட்டும் பாசம் பொத்துக்கிட்டு வருதா.. விளாசும் பிரபல நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan3 September 2025, 3:32 pm
நடிகர் விஜய், அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதற்காக தனது சினிமா கேரியரை தூக்கி வீசவும் முடிவு செய்துள்ளார்.
ஆனால் சினிமாவில் அவருக்கு பக்க பலமாக இருந்தது கேப்டன் விஜயகாந்த்தான். கேப்டன் இல்லாமல் விஜய் சினிமா கேரியரில் இவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்திருக்க முடியாது. இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.

இப்படியிருக்கையில், நடிகை அம்பிகா, தனியார் சேனலுக்கு விஜய் பற்றி பேசி, சரமாரி விமர்சனம் செய்துள்ளார். அதில், கேப்டன் இறந்து போய்விட்டார், அவருடைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார். ஏன் ஒரு காட்சியில் விஜய் நடித்து தருகிறேன் என கூறியிருக்கலாமே, ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கலாமே?
காரியம் ஆகணும்ன்னா கால்ல புடிப்பார் விஜய் – அம்பிகா 🔥🔥
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) September 2, 2025
போறவன் வரவன் கிட்டலாம் விஜய் அடி வாங்குறான் 🤣 pic.twitter.com/i82qdU0Buz
என் அண்ணனுக்கு இது கூட செய்யமாட்டானா என கூறி செய்திருக்கலாமே? இப்ப மட்டும் திடீர் பாசம் பொத்துகிட்டு வருதா? தேவைப்படும் போதும் மட்டும் கேப்டனை அண்ணா அண்ணா என கூறுகிறார். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா மாதிரி கஷ்டப்படணும்.. சும்மா கையில் ஒரு மைக்கை பிடித்து பேசினால் அரசியலில் சாதிக்க முடியாது என கடுமையாக அம்பிகா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
