ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?
Author: Prasad7 May 2025, 12:13 pm
ஆப்ரேஷன் சிந்தூர்
பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால் 22 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் நிச்சயம் போர் பிரகடனம் அறிவிக்க வேண்டும் என இந்தியர்கள் பலரும் ஆவேசமடைந்தனர்.
இந்த நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் 9 முகாம்களில் தாக்குதல் நடத்தியது. காலை எழுந்தவுடன் இந்த செய்தியை பார்த்த பலரும் தன்னுடைய நாடு பதிலடி கொடுத்த பெருமிதத்தில் உள்ளனர். இச்சம்பவத்தை பாராட்டி பலரும் பதிவிட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் இந்திய இராணுவத்தின் பதிலடியை பாராட்டி பதிவிட்டு இருந்தார்.
ராயல் சல்யூட்
“இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என்று தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார் விஜய். அந்த பதிவில் ஒருவர், “டுவிட் போட்டால் மட்டும் பத்தாது, களத்துக்கு போகணும்” என்று கமெண்ட் செய்திருந்தார்.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!
— TVK Vijay (@TVKVijayHQ) May 7, 2025
இந்த கம்மெண்ட்டை பார்த்து கொந்தளித்த விஜய் ரசிகர்கள், “நீ அப்படி எத்தனை களத்துக்கு சென்றாய்?”, “இராணுவத்துல போயா சண்டையிட முடியும்?” போன்ற ரிப்ளைகளால் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டுவிட் போட்டா மட்டும் பத்தாது களத்துக்கு போகணும்
— 🐉 𝘽 𝙃 𝘼 𝙍 𝘼 𝙉 𝙄 🚬🥃𓃵 (@Glacierxxz) May 7, 2025