மணிரத்தினம் அழைத்ததால் அரசு வேலையை உதறி தள்ளிய நடிகர்.. ஜெயித்ததால் அடித்த ஜாக்பாட்..!
Author: Vignesh4 March 2023, 4:45 pm
திறமையான கதை மூலம் பலரையும் கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.
கடந்தாண்டு மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான வரலாற்று மிக்க திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெளிவந்து வசூல் ரீதியாக சாதனையும் படைத்தது. பொன்னியின் செல்வன் படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் பார்த்து வியந்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்ற படம். அந்த அளவிற்கு வரலாற்றுக் கதையை படமாக கொடுத்தார்.
இப்படிப்பட்ட இயக்குனர் மணிரத்தினம் ஆரம்பத்தில் காதல், ரொமான்ஸ் போன்ற படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை கவர்ந்தார். அந்த வகையில் காதல் படத்தை கொடுப்பதில் இவரை போல் தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. ரசிகர்களுக்கு எந்த மாதிரி படங்களை கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்பதை நன்கு அறிந்து படத்தை இயக்குவதில் இயக்குனர் மணிரத்தினம் வல்லவர் என்றே சொல்லலாம்.
இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமாவை வேறொரு பரிமாணத்தில் பார்க்க கூடியவர். இயக்குனர் மணிரத்தினம் நாயகன், தளபதி போன்ற படங்களின் மூலம் உச்சகட்ட நட்சத்திரங்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட இவருடைய படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்காக தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று பல பேர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தும் உண்டு.
அந்த வகையில், மணிரத்தினம் கூப்பிட்டார் என்பதற்காக ஒருவர் தான் பார்த்துக் கொண்டிருந்த அரசு வேலையை விட்டுவிட்டு நடிக்க வந்து விட்டார். அவர்தான் அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு அப்பாவாக நடித்தவர் பிரமிட் நடராஜன். இவர் இதற்கு முன்னர் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அலைபாயுதே படம் தான் இவருக்கு சினிமா கேரியரை உயர்த்தி கொடுத்தது என்று சொல்லலாம்.
அலைபாயுதே படம் பிரமிட் நடராஜனுக்கு மட்டுமல்ல இந்த படத்தில் வரும் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஒரு திருப்புமுனையாக தான் அமைந்தது. ஆனால் பிரமிட் நடராஜன் அலைபாயுதே படத்தின் மூலம் தான் பரிச்சயமானார் என்றே சொல்லலாம். இதனைத் தொடர்ந்து பிரமிட் நடராஜன் அடுத்த படமான பிரெண்ட்ஸ் மற்றும் சமுத்திரம் படம் இவரை ஒரு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காணச் செய்தது.
அப்படிப்பட்ட பிரமிட் நடராஜன் நடிப்பதற்காக கவர்மெண்ட் வேலையை விட்டுட்டு வந்திருந்தாலும் அதற்கான பலனை அடைந்து விட்டார் என்று சொல்லலாம். பிரமிட் நடராஜன் நடிப்பில் ஜெயித்ததால் அவர் பார்த்த கவர்மெண்ட் வேலை அவருக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.