அம்பானி வீட்டு கல்யாணமாவே இருந்தாலும்…நான் இப்படித்தான் பாடுவேன் – ஏ.ஆர்.ரஹ்மான் Thug வீடியோ!

Author:
27 July 2024, 9:09 am

இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை மீது எவ்வளவு பற்று வைத்திருக்கிறாரோ அதைவிட பல மடங்கு அதிகம் தன்னுடைய தாய் மொழியான தமிழ் மீது பற்று வைத்திருக்கிறார். அதனை பல மேடைகளில் அவர் வெளிப்படுத்தியும் காட்டி இருக்கார். குறிப்பாக பாலிவுட் சினிமாக்களிலும், பாலிவுட் திரைப்பட விழாக்களிலும், பாலிவுட் நட்சத்திர வீட்டு விழாக்களிலும் பங்கேற்கும் ஏ ஆர் ரகுமான் அங்கும் ஹிந்தியை தவிர்த்து தாய் மொழியான தமிழை மேலோங்க செய்திருக்கிறார்.

தமிழில் பேசுவது, ஹிந்தியில் கேள்வி கேட்டால் தமிழில் ரிப்ளை கொடுப்பது இப்படியாக பல மேடைகளில் செய்திருக்கிறார். அது சமூக வலைதளங்களில் வெளியாக ஏ ஆர் ரஹ்மானை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி. தள்ளியுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் ஒட்டுமொத்த இந்திய திரை நட்சத்திர பிரபலங்களும், உலக சினிமா நட்சத்திரங்களும், மிகப்பெரிய விஐபிகளும் கலந்து கொண்ட திருமணம் தான் அம்பானி வீட்டு கல்யாணம்.

அதில் ஏ ஆர் ரஹ்மானுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். ஏ ஆர் ரகுமான் அந்த கல்யாண வீட்டில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி இருக்கிறார். அதிலும் பெரும்பாலும் அவர் தமிழ் பாடல்களையே பாடியிருந்தது தான் அங்கு ஹைலைட். ஒட்டு மொத்த பாலிவுட் காரர்களும் ஒன்று கூடி ஆட்டம் போட்டு இருந்த அந்த கல்யாண வீட்டில் பிரபல பாடகி ஒருவர் ஹிந்தியில் பாடல் பாட அடுத்த வரியை தமிழில் பாடி அசத்தியிருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

என்னதான் நீங்கள் எவ்வளவு ராஜ மரியாதை கொடுத்து என்னை அழைத்திருந்தாலும் அது எவ்வளவு பெரிய பணக்கார வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட எந்த இடத்திலும் நான் என் தாய் மொழி விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என ஏ ஆர் ரஹ்மான் அம்பானி வீட்டு கல்யாணத்திலும் தன்னுடைய Thug Life சம்பவத்தை சிறப்பாக செய்து விட்டார் என அவரது தமிழ் ரசிகர்கள் புகழ் பாராட்டி வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!