ஒரே ஒரு படம்… ரூ.50 கோடி சம்பளம் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்!
Author: Udayachandran RadhaKrishnan15 July 2025, 10:43 am
ஒரே ஒரு படம் கொடுத்த வெற்றியால் தனது சம்பளம் 50 கோடி ரூபாயாக உயர்ந்தது என பிரபல இயக்குநர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தால் பெரிய நடிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார். அடுத்தது ,இவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் படம் படு ஹிட் அடித்தது. கைதி படம் 100 கோடி, மாஸ்டர் படம் 300 கோடி, விக்ரம் படமும் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியது.

இப்படி படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வந்த லோகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரானார். மீண்டும் விஜய்யை வைத்து அவர் எடுத்த லியோ திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், ரூ.600 கோடி வசூலை ஈட்டியது.
#Leo was a huge success and collected more than 600cr 🔥That is why my salary became 50 crores that is twice of my previous salary- @Dir_Lokesh pic.twitter.com/gh3SeKMWpV
— Bala (@kuruvibala) July 14, 2025
இதனால் லோகேஷ் கனகராஜ்க்கு ஜாக்பாட் அடித்தது. அதாவது தான் வாங்கிய முந்தைய சம்பளத்தை விட இந்த படம் தனது சம்பளதத்தை இரட்டிப்பாக்கியது எனவும், சுமார் ரூ.50 கோடி அளவில் சம்பளம் அவர் பெற்றதாக அவரே கூறியுள்ளார். இது குறித்து லோகேஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
