நாள் ஒரு நட்சத்திரம் : என்றும் இளமை மாறாத குரல் ‘ஆஷா போஸ்லே’..!

8 September 2020, 6:27 pm
Quick Share

செண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே.. என்ன நாள் ஒரு நட்சத்திரம் கதையில் பாடலா… ஆம் இந்த கதையில் நட்சத்திரம் செண்பகமாய் தமிழ் திரைப்பட பாடல்களில் என்றும் மணக்கும் ஆஷா போஸ்லேதான்..

இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணி பாடகியான இவரை அறிமுகம் செய்ய பெயர் தேவை இல்லை இவர் பாடிய பாடல்கள்போதும். ஒரு மொழியில் பேசவே மூளை பிதிங்கி விடும் மனிதர்கள் மத்தியில், இவர் அசாத்தியங்களின் ராணிதான்.

தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மலையாளம், குஜராத்தி போன்ற பதினான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலம், ரஷ்யன், செக், மலாய் என பல அந்நிய மொழிகளிலும் பாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

விருதுகளை வாங்கி வீட்டிற்குள் குவித்து வைத்திருக்கும் இவர் அமைதியின் திருவுருவம். இளையராஜா, ஏ.ஆர் ரஹூமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் பாடலுக்கு வலு செத்த இவரின் குரல் காதுகளுக்கு தேன் பாய்ச்சும்.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா” என்ற பாடலை கேட்கும்போது, ஆஷா போஸ்லேவின் குரலில் இளைமை ததும்பும். இவர் பாடகர் மட்டும் அல்ல நடிகையும் கூட..அது மட்டும் அல்ல இசையமைப்பாளரும் கூட.. என நீண்டுகொண்டே போகிறது இவர் படைப்புகளின் பட்டாளம்.. எப்படி ஒரு உருவத்தில், ஒரு மூளையில் பலவித திறமைகள் என அவரை வியந்து பார்க்காதே கண்களே இருக்க முடியாது.

தனி மனுஷியாக ஆரம்ப காலத்தில் தன் குழந்தைகளை தாலாட்டி தூங் வைக்கவும், சோறுட்டி சீராட்டவும் என பாடிக்கொண்டு இருந்த அவரின் அலாதியான குரல் சபையில் எடுபடவில்லை. ரசிகர்களை கவரவும் இல்லை. தொடர்ந்து, 1952 ஆம் ஆண்டு “சஜ்ஜத் ஹூசையின்” இசையமைத்த “சங்தில்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

அந்த பாடல், அவருக்கு நல்ல பெயரை பெற்றுதந்தது மட்டுமல்லாமல், நிறைய வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தது. தொடர்ந்து பாடத்தொடங்கிய அவர், 1966 ஆம் ஆண்டு ஆர். டி. பர்மன் இசையமைத்த “தீஸ்ரி மஞ்சில்” என்ற திரைப்படத்திற்காக “காதல் உறழ்” என்ற பாடலைப் பாடினார். பிறகு, இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்தது மட்டுமல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணமும் செய்துகொண்டனர்.

இப்படி 2006ஆம் ஆண்டுவரை 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய ஆஷா போஸ்லே கின்னஸ் புத்தகத்தால் உலக வரலாற்றில் அதிகம் பதிவு செய்யப்பட்ட கலைஞராக கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். இப்படி தனது வாழ்கை பயணத்தில் பல இடையூறுகளை கடந்து சாதனைகளின் சாட்சியாக வாழ்ந்து வரும் “ஆஷா போஸ்லே” அதிசயம்தான்… அலைபாயும் அவர் குரல் கேட்ட மனதோடு முடிகிறது நாள் ஒரு நட்சத்திரம்.

Views: - 0

0

0