ஒவ்வொரு மாதமும் 40 லட்சம் வேணும்! நீதிமன்ற படி ஏறிய ஆர்த்தி? 

Author: Prasad
21 May 2025, 3:49 pm

ஆர்த்தி-ரவி மோகன் பிரிவு

ரவி மோகனும் ஆர்த்தியும் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளது. ஒருவருக்கொருவர் மிகவும் அன்புகாட்டிக்கொள்ளும் தம்பதியினராக பல பேட்டிகளிலும் ஊடகங்களிலும் வலம் வந்தனர். இவர்களை பார்த்து “தம்பதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று ரசிகர்கள் பலரும் கூறியது உண்டு.

ஆனால் கடந்த 2024 ஆம் ஆண்டு திடீரென இவர்கள் இருவரும் தங்களது பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் ரவி மோகனை தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார் எனவும், ரவி மோகனை வைத்து படம் எடுத்து நன்றாக சம்பாதித்துவிட்டு அவரை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்திருந்ததாகவும், இந்த காரணத்தினால்தான் ரவி மோகன், ஆர்த்தியை விட்டு பிரிய நேர்ந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. 

aarti asking for alimony from ravi mohan

இதனை தொடர்ந்து ரவி மோகன் கெனீஷாவுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது மிகப்பெரிய பிரளயத்தை உண்டு செய்தது. ரவி மோகன்-கெனீஷா ஜோடியாக வலம் வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், ஆர்த்தி மனம் நொந்தபடி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரவி மோகன், தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்து கொடுமை செய்தனர், தன்னுடைய பெற்றோரை கூட பார்க்க முடியவில்லை, தன்னுடைய பணம்தான் அவர்களுக்கு தேவைப்பட்டது, தன்னுடைய குழந்தைகளை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என பல புகார்களை அடுக்கியவாறு 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

அதன் பின் ஆர்த்தி, ரவி மோகன் கூறிய அனைத்தும் பொய் என்று கூறும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இவ்வாறு மாறி மாறி இருவரும் அறிக்கை வெளியிட்டு வந்தனர். 

40 லட்சம் வேண்டும்?

ரவி மோகன்-ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதாவது தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஆர்த்தி. 

aarti asking for alimony from ravi mohan

ஆர்த்தியின் ஜீவனாம்ச மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், வருகிற ஜூன் 12 ஆம் தேதிக்குள் ரவி மோகன் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • enforcement department may round up sivakarthikeyan simbu and dhanush அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் இந்த நடிகர்கள்தான்? ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள்!
  • Leave a Reply