மீண்டும் ரவி மோகனை வம்புக்கு இழுத்த ஆர்த்தி? இன்ஸ்டா ஸ்டோரியால் ஏற்பட்ட சர்ச்சை!
Author: Prasad1 July 2025, 4:29 pm
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு
ஆர்த்தியுடன் நடிகர் ரவி மோகன் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மீது ஒருவர் அவதூறு கிளப்பும் வகையில் எந்த அறிக்கையும் பதிவுகளும் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்த பதிவுகள் அனைத்தையும் நீக்கினர். இந்த நிலையில் நேற்று ஆர்த்தி பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

எச்சரிக்கையாக இருங்கள்?
அதாவது ரவி மோகன் தனது மூத்த மகனான ஆரவின் 15 ஆவது பிறந்தநாளை கொண்டாடியதை தொடர்ந்து தனது இரு மகன்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் ஆர்த்தி, தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “எச்சரிக்கை, சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தெரியலாம்” என பதிவிட்டிருந்தார். எனினும் தனது இன்ஸ்டா ஸ்டோரியை ஆர்த்தி சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். ரவி மோகனை குறிப்பிட்டுதான் ஆர்த்தி அவ்வாறு கூறினார் என சமூக வலைத்தளத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.