ஆர்த்தி செய்த துரோகம், மாமியார் கொடுமை : கெனிஷாதான் என் வாழ்க்கை துணை.. மவுனம் கலைத்த ரவி மோகன்!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2025, 1:59 pm

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது முதல் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வருகிறது, இரு மகன்களுடன் தாய் வீட்டில் ஆர்த்தி வசித்து வருகிறார்.

இதனிடையே பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக இருவரும் பொதுவெளியில் வலம் வந்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் இது நட்பு தான், என இருவரும் மாறி மாறி அறிவிதது வருகின்றனர். இதனிடையே ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இருவரும் கைக்கோர்த்து வந்தது சர்ச்சையாக வெடித்தது.

இதனால் கடுப்பான ஆர்த்தி, கடும் கோபத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டிருந்தார். ஆர்த்திக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் வரிசை கட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்த்திக்கு பதிலடி தரும் விதமான நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரவி மோகன். அதில், இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்

தற்போது நான் எடுத்த முடிவால் முன்பு எப்போதும் இல்லாத அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன், எனது குழந்தைகளை அல்ல. எனது குழந்தைகள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி, அவர்களுக்காக அனைத்தும் செய்வேன்.

என்னையும், இணையவரையும் விமர்சித்து பல பதிவுகள் வருவது வருத்தமளிக்கிறது. எனக்கு தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்க்கையின் அழகான துணை. என் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் கெனிஷா.

Aarti's betrayal... Now everything is about Kenishaa.. Ravi Mohan!

முன்னாள் மனைவியுடன் சேர்ந்து வாழ எத்தனையோ முயன்றேன், எனது சொத்துகள், எனது வங்கி கணக்கு, சமூக வலைதள கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மனைவியால் உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். பொன் முட்டையிடும் வாத்தை போல என்னை பயன்படுத்தினர். கணவராக ஆர்த்தி என்னை மதிக்கவே இல்லை.

Ravi mohan and kenishaa

LIFE STYLE என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்ளதான் என் கடன் பிரச்சனைக்கு காரணம். எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடன்களுக்கு என்னை ஜாமீன்தாரராக கடந்த வருடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர்.

கடந்த 5 வருடமாக என் பெற்றோருக்கு ஒரு பைசா கூட கொடுக்க முடியாதபடி செய்துவிட்டனர். பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை வைத்து முயற்சி செய்கிறார்கள் என ரவி மோகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • ravi mohan feeling sad that his children used as a tool for financial gain கையெழுத்து போட மட்டும் அப்பா தேவையா? பக்கத்துக்கு பக்கம் ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன்!
  • Leave a Reply