தனுஷ் நடிப்பில் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் 2 – வெளியான பிரமாண்ட அறிவிப்பு !

Author: Udayaraman
1 January 2021, 11:13 pm
Quick Share

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையால் புது படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிட்டார்கள்.

ஆனால் எதிர்பாராத அளவு எல்லாமே ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்களின் வரவேற்பால் ஷோவின் எண்ணிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டமும் தியேட்டர்களில் அலைமோதுகிறது.

இந்த சந்தோஷமான செய்தி இன்னொரு குஷியான செய்தியை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இயக்குமாறு ரசிகர்கள் அளவில்லா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நான் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஒரு போஸ்டரை ட்விட்டரில் வெளியீட்டு தனுஷை டேக் செய்திருந்தார் செல்வராகவன். அதை ரீட்டுவிட் செய்துள்ள தனுஷ், “பிரம்மாண்டம். செல்வராகவனின் கனவு திரைப்படம் இதன் Pre production வேலைகள் முடிக்கவே ஒரு வருடம் ஆகும்.

எனவே காத்திருப்பு அதிகமாக இருக்கும் ஆனால் அந்த காத்திருப்பிற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இருக்கும், ஆயிரத்தில் ஒருவன் 2 (AO II) . இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகத்தை இன்று திரையரங்கில் பார்த்து வந்த இதனைப் பார்த்து ஏக குஷியில் இருக்கிறார்கள். இவ்வாறாக 2021 அமோகமாக ஆரம்பித்தது.

Views: - 152

0

0