“தற்கொலை செய்யும் நிலைக்கு வந்துவிட்டேன்” – அப்பாஸ்ஸின் உருக்கமான பேச்சு !

29 January 2021, 12:36 pm
Quick Share

எதோ பார்க்க சேட்டு வீடு பையன் மாதிரி இருக்கான், என்று இயக்குனர் காதல் தேசம் மூலம் அப்பாஸை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
அந்த ஒரு படத்திலியே பல பெண்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார்.

கொஞ்சம் இவரை பற்றி விசாரித்தால், கமல்ஹாசனுக்கு பிறகு
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. பிறகு எல்லா பெண்களையும் ஆசை காட்டி மோசம் செய்தது போல் கடந்த 2001ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனரை அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி தான் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு Costume designer.

இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் அக நக பாடலில் மட்டும் வந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் “இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு சினிமா கலைஞருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் கவனிக்க மறுக்கிறார்கள். ஆனால் நியூசிலாந்தில், அப்படியான விஷயங்கள் கிடையாது. . நியூசிலாந்திற்கு வந்த பிறகு நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன், நான் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்தேன், அதை நான் ரசித்தேன். கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன், இப்போது தற்கொலை முயற்சி செய்ய கூடாது என்பதை வலியுறுத்த Motivational Speaker ஆக பணியாற்றி வருகிறேன், ஏன் என்றால் ஒரு சமயத்தில் தற்கொலை செய்யும் முயற்சிக்கு தள்ளப்பட்டேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Views: - 28

0

0