அஜித் நடிகை திடீர் கல்யாணம்: திருமண கோலத்தில் வைரலாகும் போட்டோ..!

Author: Shree
16 March 2023, 10:06 am

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் வெப் தொடரின் மூலம் நடிகையாக முகமறியப்பட்டார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளும் அவை தேடி வந்தது. இதனிடையே நோட்ட, காற்று வெளியிடை, விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படம் தான் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது திடீரென மஞ்சள் தாலியுடன் திருமண ஆன பெண் போன்று இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் பண்ணிட்டீங்க? அது சரி மாப்பிள்ளை யாரு என கேட்டு வருகிறார்கள். ஆனால் இது ஏதேனும் படப்பிடிப்பிற்காக இருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!