“இது பொண்ணா..? இல்ல, தங்க ரத தேரா?” – அபர்ணா பாலமுரளியின் போட்டோஸ் !

Author: Rajesh
21 June 2022, 2:29 pm

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். சில நாட்களுக்கு முன்னாடி வீட்டுல விசேஷம் பட Promotion நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

தற்போது துளி மேக்கப் போட்டுகிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ரசிகர்கள் சிலர், “இது பொண்ணா..? இல்ல, தங்க ரத தேரா?” என வர்ணிக்கிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?