பாலையா பத்தி பேச சொல்லுங்க பார்க்கலாம்; பிஞ்சிப்போய்டும்- ப்ளூ சட்டையை வம்பிழுத்த பிரபலம்
Author: Prasad20 August 2025, 1:36 pm
சர்ச்சைக்குரிய விமர்சகர்
யூட்யூப் தளத்தில் தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னணி சினிமா விமர்சகராக திகழ்ந்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். எந்த திரைப்படமாக இருந்தாலும் பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என யார் நடித்திருந்தாலும் தனக்கு தவறென பட்டதை கிண்டல் தன்மையோடு வெளிப்படையாக பேசுபவர்தான் ப்ளு சட்டை மாறன். ஆதலால் இவரது விமர்சனம் பல நேரங்களில் சர்ச்சையை கிளப்பிவிடும். ஆதலால் இவரது விமர்சனம் விமர்சனத்திற்குள்ளாவதும் உண்டு.

இந்த நிலையில் ப்ளு சட்டை மாறன் குறித்து மிகவும் கடுமையாக பேசியுள்ளார் பிரபல நகைச்சுவை கலைஞரும் நடிகருமான ஆதவன்.
பாலையா பத்தி பேசினால் பிஞ்சிபோய்டும்

“ப்ளூ சட்டை மாறனை தெலுங்கு கற்றுக்கொள்ளச்சொல்லி தெலுங்கில் ஒரு படத்தை விமர்சனம் கொடுக்க சொல்லுங்களேன் பார்க்கலாம். கொடுத்துட்டு எப்படி திரும்ப வரார்னு பாத்துடுறேன். தெலுங்கில் இது போன்று ஒரு படத்தை பேசினால் கும்முன்னு ஒன்று கொடுப்பார்கள். பாலையா பற்றி இரண்டு வார்த்தை தவறாக பேசினால் பிஞ்சிப்போய்விடும். ஏனென்றால் அவர்கள் எல்லாம் ஒவ்வொரு சினிமாவையும் மதிப்பார்கள்” என ஆதவன் பேசியுள்ளார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
