மாதவன் மார்க்கெட்டை காலி செய்ய முயன்ற பிரபல தமிழ் நடிகர்: கடைசில அவரே காணாம போய்ட்டாரே..!

Author: Rajesh
19 February 2023, 2:00 pm
madhavan - updatenews360
Quick Share

விஜய், அஜித், மாதவன், அப்பாஸ் என தற்போது மக்கள் பேவரைட் ஆக வலம் வரும் அனைத்து நடிகர்களும், 90ஸ்களில் தங்கள் கேரியரை தொடங்கியவர்கள். இருப்பினும், சாக்லேட் ஹீரோவாக வலம் வந்தவர்கள் மாதவன் மற்றும் அப்பாஸ். தங்கள் க்யூட் லுக், சாப்டான முகம், பேச்சு என இளம் ரசிகைகள் இவர்களுக்கு ஏராளம்.

மாதவன் சினியுலகில் வருவதற்கு முன்பே அப்பாஸ் பல படங்களில் நடித்து வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து “ரிலாக்ஸ்” என்ற படத்தில் நடித்தனர். இருவருக்கும் சமமான ரோல் கொடுத்த போதும், அப்பாஸ், மாதவன் நடித்த காட்சிகளை குறைத்தார்.

அதன் பின்னர், இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தில் மீண்டும் அப்பாஸ் மற்றும் மாதவன் இணைந்தனர். ஆனால், இந்த படத்தில் மாதவன் ஹீரோவாகவும், அப்பாஸ் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருப்பார்.

இது குறித்து பேசிய அப்பாஸ், “நான் மின்னலே படத்தில் நிறைய காட்சிகளில் நடித்திருப்பேன். ஆனால் அதை எல்லாம் நீக்கிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார். கடைசியில் அப்பாஸை காட்டிலும் மாதவன் தான் பெரிய நடிகராக உயர்ந்தார்.

Views: - 441

0

0