அவங்களுக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தேன்.. இரகசியத்தை உடைத்த அப்பாஸ்..!

Author: Vignesh
7 August 2023, 12:30 pm

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

abbas-updatenews360

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

abbas-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அப்பாஸ் தான் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணுக்கு 45 நிமிடம் முத்தம் கொடுத்து இருந்ததாகவும், பள்ளி பருவத்தில் அந்த பெண்ணை காதலித்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்த நிலையில், ஒருநாள் அந்த பெண்ணை சந்தித்த பொழுது 45 நிமிடங்கள் முத்தம் கொடுத்ததாக அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹிந்தி மியூசிக் வீடியோ செய்து கொண்டிருந்தபோது முத்தக் காட்சியில் தான் நடித்ததாகவும், ஒரு கட்டத்தில் தனக்கும் அந்த நடிகைக்கும் முத்தக்காட்சி போரடித்து விட்டதாகவும், புன்னகையுடன் நடிகர் அப்பாஸ் தெரிவித்திருந்தார்.

abbas-updatenews360

இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த காலத்தில் நீங்க கொடுத்து வைத்தவர் சார்… என்று கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

abbas-updatenews360
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!