அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2025, 2:09 pm

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ், படப்பிடிப்பு என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் இந்தியாவுக்காக கார் ரேஸில் பங்கேற்ற அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்க: இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மனைவி ஷாலினி, மகன், மகள், அஜித் மேலாளர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து நேற்று இரவு சென்னை திரும்பிய அஜித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய ஷாலினி, இந்த தருணம் பெருமையாக உள்ளது என கூறினார். இதையடுத்து இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Ajith admitted to Apollo Hospital

உடல் பரிசோதனை செய்ய அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சில பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று கூட்டத்தில் வரும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காலில் அடிப்பட்டுள்ளதால் பிசியோ சிகிச்சை என கூறப்படுகிறது. ஆனால் அஜித் தரப்பில் இருந்து எந்த தகவலும் இது குறித்து கூறப்படவில்லை.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!