நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி !

15 May 2021, 2:12 pm
Quick Share

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

இந்த நிலையில் நேற்று கொரோனா நிதிக்காக 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். இன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார் என்று பெப்ஸி தொழிலாளர் சங்க தலைவர் செல்வமணி கூறியுள்ளார்.

என்னதான் வெளியே வரமாட்டார் என்று குறை சொன்னாலும், உதவி என்று வந்தால் முதல் கையாக இவரின் கையை ஓங்கி இருக்கிறது.

Views: - 136

2

0