ஒன்னு சொன்னாலும் நச்சுனு சொல்லியிருக்காரு : வைரலாகும் ‘தல’ அஜித்தின் Whatsapp Status..!!!

Author: Babu Lakshmanan
13 November 2021, 7:09 pm
ajith wassup - updatenews360
Quick Share

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச்சுடுதல், பைக் மற்றும் கார் ரைடு செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவராவார். தற்போது, இவர் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பட வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்ட அஜித், தற்போது பைக்கிலேயே உலகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பைக்கில் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், “ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரன் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலையை வரையறுக்கிறது. நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் சமூகத்தின் அனைத்து துறையிலும் இருக்கின்றனர். எனவே, ஒரு நபரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு அவரின் குணாதிசயங்களை மதிப்பிடுவதை நிறுத்துவதற்கான சிறந்த தருணம் இது, அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எதற்காக இந்த ஸ்டேட்டஸை தற்போது வைத்துள்ளார் என்பது குறித்து தெரியாத நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெய் பீம் படம் குறித்து கருத்து தெரிவித்திருந்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

Views: - 454

2

1