‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’.. சினிமாவை மிஞ்சும் அஜித் – ஷாலினி ரொமாண்டிக் Clicks..!

Author: Rajesh
20 March 2023, 9:38 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் ரசிகர்கள் சொல்லும் நட்சத்திர ஜோடியின் பெயர் அஜித் – ஷாலினி. நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் நடிகையுமான ஷாலினி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு, நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர். அவ்வப்போது, இவர்களது திருமண நாள் அல்லது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆவதும் ட்ரெண்ட் ஆவதும் வழக்கம்.

திருஷ்டி சுத்தி போடும் அளவிற்கு இந்த ஜோடியின் சில ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல் ஆகும். ஆனால், தற்போது, ரசிகர்கள் பலரும் பார்த்திராத அஜித் – ஷாலினியின் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஷாலினி & அஜித் மாடர்ன் ஸ்டைலிஷாக இருப்பது போல உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!