“எதோ தல Look-அ பத்தி பேசினியாமே…” வலிமை படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

14 July 2021, 8:40 am
Quick Share

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை என்று ரசிகர்கள் கவலையாக இருந்தார்கள். ஆனால் மாஸ்டர் படம் முடிக்கப்பட்டு வெளியாகி தற்போது விஜயின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட வெளிவந்துவிட்டது.

இதனால் பாவப்பட்ட போனி கபூர், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என பெரிய திருவிழாவை போல வெளியிட்டார். அதன் பரிசாக இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக வலிமை இடம்பெற்றுள்ளது. யூ-ட்யூபில் அந்த Motion போஸ்டருக்கு இதுவரை 1 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.

அதுமட்டும் இல்லாமல், இந்த படத்திற்க்கு 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் மேலும் இரண்டு ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்த தல ரசிகர்கள், எதிர் தரப்பு ரசிகர்களை வம்பிழுத்து வருகிறார்கள்.

Views: - 599

7

3