ஆர்யாவின் சகோதரிக்கு அடித்த ஜாக்பாட் – ஒரே நேரத்தில் இத்தனை கோடியா?
6 February 2021, 4:48 pmஉள்ளம் கேட்குமே படத்தின் மூலம் கியூட் பாயாக அறிமுகமானார் ஆர்யா. அதன் பின் அவர் நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் தனியிடம் போட்டு அமர்ந்து கொண்டார். வட்டாரம், பட்டியல் என வித்தியாசமான கதைகளிலும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி கதைகளிலும் நடித்து தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டார். இவருக்கு சத்யா என்ற ஒரு தம்பி இருக்கிறார். அவரும் புத்தகம், அமர காவியம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் ஆரியா அளவிற்கு புகழ் அடைய வில்லை.
ஆர்யாவிற்கு தஸ்லீனா என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு கத்தார் நாட்டில் செட்டிலாகிவிட்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கத்தார் நாட்டில் லாட்டரி சீட்டுகள் இருப்பது சகஜம். அவற்றை இந்தியர்களும் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வாறு லாட்டரி சீட் வாங்கியிருந்த தஸ்லீனா அதன் முதல் பரிசை வென்றிருக்கிறார்.
இந்த லாட்டரியின் முதல் பரிசாக 15 மில்லியன் திராம், அதாவது நம்ம ஊரு கணக்கில் 32 கோடி ரூபாயாகும். மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசையும் இந்தியர்களை வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா லாட்டரியில் இவ்வளவு பணம் வென்றிருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
0