“ஷாக்”..! சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்த நடிகர் தற்கொலை..! காரணம் என்ன..?

12 November 2020, 5:20 pm
Asif_Basra_UpdateNews360
Quick Share

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்த சர்ச்சையை இன்னும் நீங்காத நிலையில், அவருடன் இணைந்து நடித்த மற்றொரு பாலிவுட் நடிகரான ஆசிப் பாஸ்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

53 வயதான நடிகர் ஆசிப் பாஸ்ரா இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பாட்டல் லோக் என்ற வெப் சீரீஸில் நடித்து வந்த ஆசிப், தர்மஷாலாவில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் எதற்காக இந்த தூரமான முடிவை எடுத்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

தகவல்களின்படி, எஃப்.சி கிபாடா சாலையில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு அருகே அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். எஸ்.எஸ்.பி காங்க்ரா விமுக்ட் ரஞ்சனை மேற்கோள் காட்டி வெளியான ஒரு தகவலில், “பாலிவுட் நடிகர் ஆசிப் பாஸ்ரா தர்மசாலாவில் உள்ள ஒரு தனியார் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தடயவியல் குழு சம்பவ இடத்தில் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிப் கை போ சே, பர்சானியா, ஹிச்சி, சான்ஜ், பிளாக் ஃப்ரைடே, ராய், ஃபேன்னி கான், ஏக் வில்லன், ஜப் வி மெட் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல், அவர் பாட்டல் லோக், வோ, ஹோஸ்டேஜ்ஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். கை போ சே படத்தில் ஆசிப் பஸ்ரா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கை போ சே படத்தில் ஆசிப் பஸ்ரா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  அவரது மறைவு செய்தி பரவியவுடன், பிரபலங்கள் மட்டுமல்லாது, ட்விட்டரில் அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

Views: - 20

0

0

1 thought on ““ஷாக்”..! சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் இணைந்து நடித்த நடிகர் தற்கொலை..! காரணம் என்ன..?

Comments are closed.