வடிவேலு உண்மையில் பிறவிக்கலைஞர்.. ஆனால், கேரவன்ல.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

Author: Vignesh
13 January 2024, 11:51 am

தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

vadivelu

குறிப்பாக, போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

benjamin

இந்நிலையில், பிரபல நடிகர் பெஞ்சமின் வடிவேலு குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நான் போண்டாமணி போன்ற பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலு தான் காரணம். அவர், ஒரு நல்ல மனிதர் கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும், அது குறித்து வடிவேலு எதுவும் கேட்க மாட்டார்.

benjamin

நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் இருக்கும் போது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வடிவேலு கேரவனில் இருப்பார். கேப்டன் விஜயகாந்த் நடிகர்களின் வாழ்க்கை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்வார். யார் மனதும் நோகும்படி விஜயகாந்த் பேச மாட்டார். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் என்று பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!