முதல் மனைவி மறைவால் சோகத்தில் இருந்த பாக்கியராஜ்.. தயங்காமல் பூர்ணிமா செய்த செயல்…!

Author: Rajesh
13 August 2023, 11:50 am

தனது தனித்துவமான திரைக்கதைக்காக இயக்குனராகவும், தனது குரல் மற்றும் மொழி மூலம் நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பாக்கியராஜ். இவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் பிரபல நடிகை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜின் காதல் கதை குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் மனைவி இறப்பினால் சோகத்தில் இருந்த பாக்கியராஜிற்காக, பூர்ணிமா செய்த செயல் குறித்தும், அவர்களுடைய திருமணம் எதனால் முடிவடைந்தது என்பது குறித்து விரிவான தகவல் இதோ..

பாக்கியராஜ் டாப் இயக்குனராக இருந்த சமயத்தில் ஒரு நாள் வாய்ப்பு கேட்க பூர்ணிமா வந்திருக்கிறார். அப்போது பூர்ணிமா இயக்குனர் பாக்கியராஜிடம் இங்கிலீஷில் பேசிகொண்டே இருக்க, அதற்கு பாக்கியராஜ் ஓகே சி யூ என்று இரண்டே வார்த்தையில் முடித்துவிட்டு போய்விட்டாராம். இதனால் பாக்கியராஜ் ரொம்ப திமிரு பிடிச்ச ஆள் போல என்று பூர்ணிமா நினைத்திருக்கிறார்.

k bhagyaraj-updatenews360

அதற்குப் பிறகு பாக்யராஜை பற்றி பூர்ணிமாவும் மறந்து விட்டாராம். அப்போது, டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதாநாயகியை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் பூர்ணிமாவின் நினைவு பாக்யராஜிற்கு வரவே, இந்த கேரக்டருக்கு பூர்ணிமா சரியாக இருப்பார் என்று பூர்ணிமாவை வரச் சொல்லி அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்.

அப்போதுதான் முதல் முறை சந்திக்கும் போது ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என பூர்ணிமா கேட்க, அதற்கு பாக்கியராஜ் நீங்கள் பேசிய ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. அதனால் தான் அப்படி சொன்னேன் என்று பாக்கியராஜ் சொல்ல பூர்ணிமாவும் சிரித்திருக்கிறார்.

பின்னர், டார்லிங் டார்லிங் டார்லிங் திரைப்படத்தின் போது கூட பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா இடையே இயக்குனர் – நடிகை என்ற உறவு தான் இருந்திருக்கிறது. அப்போது பிரவீனா (பாக்யராஜ் முதல் மனைவி) உயிரோடு இருந்திருக்கிறார். பிரவீனா மற்றும் பூர்ணிமா இடையே நல்ல நட்பும் இருக்கவே, பூர்ணிமா பாக்யராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

பாக்யராஜ் – பிரவீனாவின் திருமண நாளும் பூர்ணிமாவின் பிறந்த நாளும் ஒன்றுதானாம். திடீரென பிரவீனா உடல்நிலை குறைவு காரணமாக காலமாகவே, பாக்கியராஜ் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். பாக்யராஜின் அண்ணன் பாக்யராஜை அடுத்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருந்திருக்கிறார். ஆனால் பாக்கியராஜ் பிரவீனாவை மறக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.

பிறகு ஒரு கட்டத்தில் தனது வாழ்க்கை பாதை மாறி போய்விடக்கூடாது என பயந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில், மீண்டும் பூர்ணிமாவை சந்தித்த பாக்யராஜுக்கு அவருடைய எளிமை பிடித்து இருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்த பாக்கியராஜ் அவரிடம் அதை சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து இருக்கிறார்.

அடுத்த நாள் பாரிஸில் ஒரு பட பிடிப்புக்காக பூர்ணிமா செல்லவே, சரி நீங்க அங்க போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க என பாக்கியராஜ் சொல்லி அனுப்பி இருக்கிறார். அடுத்த நாள் பாரிஸிலிருந்து பூர்ணிமா போன் செய்யவே உதவியாளர் பேசிவிட்டு, பிறகு பாக்கியராஜிடம் போன் வந்தது பற்றி சொல்ல பாக்கியராஜ் அவரை திட்டி விட்டு போன் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார்.

அடுத்த நாள் பூர்ணிமா போன் செய்ததும் பாக்யராஜ் பேசி இருக்கிறார். அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது தான் பூர்ணிமாவிடம் தன்னுடைய காதலை பற்றி பாக்கியராஜ் கூறியுள்ளார். அதற்கு பூர்ணிமா தனது அம்மாவிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டாராம். அதைத் தொடர்ந்து பாக்கியராஜ் பூர்ணிமா இருவரது குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்று திருமணம் செய்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!