பொதுவெளியில் ரசிகர்கள் செய்த சங்கடமான காரியம்? ஓபனாக போட்டுடைத்த தொகுப்பாளினி டிடி!
Author: Prasad12 August 2025, 2:11 pm
90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட்!
90’ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய தொகுப்பாளினியாக வலம் வந்தவர்தான் டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக ஆனார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, இதனிடையே “அகல்யா”, “செல்வி”, “கோலங்கள்”, “அரசி” போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் “நள தமயந்தி”, “விசில்”, “சரோஜா”, “பவர் பாண்டி” போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ரசிகர்கள் செய்த சங்கடமான காரியம்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட டிடி, “தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் சுலபமாக போய்விட முடியாது. பொதுவெளியில் மக்கள் திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். எதற்கு இப்படி செய்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை.
பேருந்து, ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்ய ஆசையாக இருக்கும். எனினும் அதனை தவிர்க்க வேண்டியுள்ளது. ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை. நம்மை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்” என கூறியார். டிடியின் இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
