விவாகரத்து பிரச்சனை – தனுஷ்-க்கு சினிமாத்துறையில் பின்னடைவு ஏற்படுமா.?

Author: Mari
18 January 2022, 2:43 pm
Quick Share

போலித்தங்கள் மட்டுமே நிறைந்த உலகம் தான் இந்த திரையுலகம். அங்கு அடிமைத்தனம், ஏமாற்றுத்தனமே அதிகம் இருக்கும். அதீத பணிவுடன் இல்லாவிட்டால் திமிர் பிடித்தவன், வென்றவர் தலைக்கனத்துடன் நடந்தால் அதையும் சரி என்று புகழும் உலகம் தான் சினிமா உலகம். அந்த வகையில், சமீபத்தில் கூட தங்களுக்குள் எந்த பிரிவுகளும் இல்லை என்று காட்டிக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா தற்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினியின் மருமகன் என அறியப்பட்ட பின்னரே, தனுஷ் வாழ்வில் ஏற்றம் கிடைத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை. தற்போது, ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவுக்குச் தனுஷ் செல்வதற்கு அவரது திறமை முக்கிய காரணம் என்றும் கூறலாம்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்களில் நடித்திருந்த காலத்தை திரும்பி பார்த்தால், அந்த சமயத்தில் ஏதோ ஒன்று தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது, அது ரஜினி என்ற அந்த மனிதனின் பங்களிப்பு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.


இதனிடையே, மிகப்பெரிய நடிகர் வீட்டு மருமகன் என்கிற அந்தஸ்து ஒரே நாளில் தனுஷுக்கு கிடைத்தது. தமிழ் சினிமாத்துறையில் கூடிய மரியாதை கிடைத்தது. தனுஷ் மிகச்சிறந்த நடிகர் என்பதை காட்டும் விதமாக அவரது ‘புதுப்பேட்டை’ படம் நிரூபித்தது. தொடர்ந்து யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், அசுரன், கர்ணன், மாரி போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான இடத்தைப்பிடித்தார் தனுஷ். விருதுமேல் விருதும் வாங்கியுள்ளார். தொடர்ந்து ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

தனுஷின் திறமைக்கு கூடுதல் மெறுகை தந்தது ரஜினியின் குடும்பப்பிள்ளை என்கிற அந்தஸ்த்தில், உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டு, தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளார் தனுஷ். இது, சினிமாத்துறையில் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா? ஏற்ப்படாதா என்றால், இரண்டும் நடக்கலாம் என்பதே உண்மை,

காரணம் தற்போது, தனுஷ் மிகச்சிறந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர். தனித்துவமிக்க அவரது திறமையும் அவர், இந்த இடத்துக்கு வர காரணமாக அமைந்துள்ளது. ஆகவே அது அவரை பாதிக்காது எனலாம். ஆனால் இனிமே தனுஷை தனியாளாகத்தான் இந்த சினிமா உலகம் பார்க்கும். வரும் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தனி ஆளாகத்தான் சந்திக்க வேண்டும் இனிமேல் அவரை தூக்கி விட ரஜினி என்ற கை இருக்காது.

Views: - 369

0

0