கொரோனாவுக்கு அடுத்தடுத்து சொந்தங்களை இழந்து நிற்கும் பிரபல திரையுலக ஜோடி..!

3 September 2020, 12:31 pm
Quick Share

பாலிவுட்டின் சோக நடிகர் என்று அறியப்படும் பழம் பெரும் நடிகர் திலீப் குமாரின் சகோதரர் ஈசான்கான் கொரோனா தொற்றால் நேற்று இரவு 11 மணி அளவில் காலமானார்.

நாடு முழுவதும் தீபோல் பரவி வரும் கொரோனா தொற்று, பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சாதரண மக்கள் என பாகுபாடு இன்றி பரவி வருகிறது.

இதற்கு ஏராளமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த சூழலில் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் சகோதரரும், ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் தாத்தாவுமான ஈசான்கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தும் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால், நேற்று இரவு 11 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட திலிப்குமாரின் மற்றொரு சகோதரர் அஸ்லாம்கான் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி உயிரிழந்தார். பிரபலங்கள், சரிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0