மாரிமுத்து மரணத்தை முன்பே கணித்தாரா?.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh9 September 2023, 10:24 am
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், சீரியலில் வரும் காட்சியில் நெஞ்சு வலிப்பதாகவும், ஏதோ தவறு நடப்பதாகவும் அவர் ஒரு சீனில் தெரிவித்திருந்தார். சீரியல் பார்க்கும்போது சீரியலை சற்று பரபரப்பாக்கி உள்ளது. ஆனால் இன்றைய தினம் மாரிமுத்து இறந்துவிட்டதால் இந்த காட்சி இனையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Miss You #Marimuthu Sir !
— I'm So Wasted 😉 (@BloodyTweetz) September 8, 2023
Really Hard to Accept ~ ?? pic.twitter.com/cuphK5rvEu