வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!
Author: Prasad1 July 2025, 6:33 pm
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்களும் அம்சங்களும் சிம்புவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் பயன்படுத்த உள்ளார் வெற்றிமாறன். இதற்கான அனுமதியையும் தனுஷிடம் இருந்து பெற்றுவிட்டார்.
“வடசென்னை” படத்தில் அமீர் ஏற்று நடித்த “ராஜன்” என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் வெற்றிமாறன் இத்திரைப்படத்தை உருவாக்கவுள்ளார் எனவும் இதில் சிம்பு ராஜன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

வெற்றிமாறன், சிம்புவை வைத்து இயக்கவுள்ள இத்திரைப்படத்தின் புரொமோ படமாக்கப்பட்டு வருகிறது. இந்த புரொமோ வீடியோ ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் படத்தில் இணைந்த மணிகண்டன்?

இந்த நிலையில் வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் மணிகண்டன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் தற்போது பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.