சிம்பு ஃபாரின் சரக்கு கேட்டாரு: மானத்தை வாங்கிய நடிகர் ஜான் விஜய்!

22 February 2021, 9:58 pm
Quick Share

சிம்பு குறித்து ரகசியங்கள் சொல்லி அவரது மானத்தையே நடிகர் ஜான் விஜய் வாங்கியுள்ளார்.

சரத்குமார், நயன்தாரா நடிப்பில் வந்த தலைமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜான் விஜய். இந்தப் பட த்தைத் தொடர்ந்து ஓரம் போ, பில்லா, அங்காடி தெரு, கோ, கலகலப்பு, திருடன் போலீஸ், வெள்ளைக்கார துரை, கோ 2, கபாலி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என்று ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிஸியாக படங்களில் நடித்து வரும் ஜான் விஜய், அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், சிம்பு குறித்து முக்கியமான ரகசியங்களை வெளியிட்டுள்ளார். தான் ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு பார்ட்டிக்கு என்று பல விதமான சரக்கு பாட்டில்கள் வரும். அப்போதெல்லாம் சிம்பு போன் போட்டு, ஏதாவது ஃபாரின் சரக்கு பாட்டில் வந்திருக்கா? சரக்கு அடிக்கலாமா என்று கேட்டதாக கூறியுள்ளார். ஜான் விஜய் இப்படி ஒளிவு மறைவு இன்று சிம்பு பற்றி ஓபனாக பேசியது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 13

0

0