ராஷ்மிகாவுக்கு சினிமாவுல நல்ல எதிர்காலம் இருக்கு: கார்த்தி பாராட்டு!

24 March 2021, 9:52 pm
Quick Share

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நடிகர் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்திக்கு மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுல்தான் படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்த நிலையில், தற்போது சுல்தான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரைலர் வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகர் கார்த்தி கூறியிருப்பதாவது: இதுவரை எனது படங்களில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கைதி ஆகிய படங்கள் ஒவ்வொரு ரகமாக இருக்க அடுத்து சுல்தான் படம் வருகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் ஏராளமான படங்களின் வாய்ப்பு வந்தும், எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கே என்று கிராமத்து ரோலுக்காக காத்திருந்து இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஷ்மிகா 4 மொழி பேசுகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் ஒரே லூட்டி தான். அப்படியிருந்தும், ஷாட்டுக்கு வந்ததும் லூட்டி அடிச்சதையெல்லாம் மறந்துவிட்டு கேரக்டரா மாறி டயலாக் பேசி அசத்துவார். அவரது நடிப்பைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். ராஷ்மிகாவுக்கு சினிமாவில் பெரிய எதிர்காலமே இருக்கு என்று கார்த்தி பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நெப்போலியன், லால், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, நவாப் ஷா, ராமசந்திர ராஜூ ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி சுல்தான் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 33

10

1