சுல்தான் டீசர் என்ஜிகே படத்தின் காப்பியா?

1 February 2021, 10:51 pm
Quick Share

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில், அது என்ஜிகே படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. தற்போது, இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்திக்கு மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், யோகி பாபு, நெப்போலியன், லால், பொன்னம்பலம், ஹரீஷ் பேரடி, நவாப் ஷா, ராமசந்திர ராஜூ ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் கார்த்தி, ஹரீஷ் பேரடி, யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா, நவாப் ஷா, ராமசந்திர ராஜூ என்று அனைவரது காட்சியும் இடம் பெற்றுள்ளது. அதோடு, கார்த்தி டிராக்டர் ஓட்டுவது, பாடல் பாடுவது, சண்டையிடுவது, மகாபாரதம் டயலாக் பேசுவது என்று ரசிகர்களை குதூகலப்படுத்துகிறார். ஆனால், உண்மையில், இந்தக் காட்சிகள் அனைத்தும் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்தில் வரும் திமிரனும்டா என்ற பாடலின் காப்பி என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0