பொன்னியின் செல்வன் பட நடிகரின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ்… இதுக்காகவா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
14 November 2022, 4:15 pm

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்டாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக பட்டையை கிளப்பினார். கடைசியாக அவரது நடிப்பில் சர்தார் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

karthi-1-updatenews360

ராஜூ முருகன் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படம் கார்த்தியின் 25வது படமாகும். இந்நிலையில் நடிகர் கார்த்தியின் ஃபேஸ் புக் பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்கியுள்ளனர்.

சத்தமே இல்லாமல் சாதனையை படைத்து வரும் நடிகர் கார்த்தியை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், கார்த்தியின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் இதை செய்துள்ளதாக கோலிவுட் வட்டாராத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், அடுத்த படத்தின் புரமோஷனுக்காக என மற்றொரு தரப்பினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மீட்டெடுக்க முயற்சி

இதனை நடிகர் கார்த்தியே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தனது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டெடுக்க ஃபேஸ்புக் டீம்முடன் இணைந்து முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?