மகளுக்காக விலையுயர்ந்த பிறந்த நாள் பரிசை கொடுத்த கொட்டாச்சி.. அதுவும் இத்தனை லட்சமா?!(Video)

Author: Vignesh
6 April 2024, 2:05 pm

நடிகர் கொட்டாச்சி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகருடன் தமிழ் சினிமாவில் சிறுசிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். பின் பட வாய்ப்பு குறைந்ததால் திரை உலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்த இவருக்கு அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.

மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

ஆனால் இவருக்கு கிடைக்காத வரவேற்பு இவரை மகளுக்கு கிடைத்தது. ஆறு வயதில் இருந்த இவரது மகள் மானஸ்வி இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி இருந்தார்.

kottachi and manashvi-updatenews360

மேலும் படிக்க: என்னடா பொசுக்குன்னு முடிச்சுட்டாங்க.. அதிரடியாக முடிவுக்கு வரும் Vijay TV ஃபேவரட் தொடர்..!

பின்பு சில படங்களில் நடித்த மானஸ்வி விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார். மகளால் கொட்டாச்சி சொந்த வீடு வாங்கி அதில் குடியேறினார். தற்போது, மானஸ்வியின் பிறந்தநாளுக்கு அனைவரும் வாழ்த்து கூறி வர நடிகரும், அவரது அப்பாவுமான கொட்டாச்சி மகளுக்காக புதிய கார் ஒன்றை பரிசளித்து உள்ளார். இவர் வாங்கிய இந்த கார் ரூ. 13 லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?