தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு கோடி நிதி உதவி..!!

26 March 2020, 7:52 pm
Mahesh Babu 1- Updatenews360
Quick Share

இந்த கொரோன வைரசினால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து அரசாங்கமும் மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து இயங்கி வருகின்றன. அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சியை அனைத்து பிரபலங்களும் வரவேற்று வரும் நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண், ராம்சரண் போன்றோர் தெலுங்கானா அரசாங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியாக அளித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது மகேஷ்பாபு அவர்களும் சேர்ந்து இருக்கிறார். இவரும் ரூபாய் ஒரு கோடியை கொரோன நிதியாக வழங்கியிருக்கிறார்.

மகேஷ்பாபு அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த குழுவுக்கு எதிராக போராடுவோம். மற்றும் நான் அனைவரையும் அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு துரிதபடுத்துகிறேன் என்றும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் மனிதம் இந்த போருக்கு எதிராக வெல்லும் என்றும் தெரிவித்திருக்கிறார்.