என் மகன் உயிர் பிழைக்க விஜய் தான் காரணம்..! – நடிகர் நாசரின் உருக்கமான பேட்டி..!

18 July 2021, 7:51 pm
Quick Share

சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் மகன் உயிர் பிழைக்க ஒரு வகையில் விஜய் தான் காரணம் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு விஜய் ரசிகர்கள் பெருமையுடன் நெகிழ்ந்து போய் உள்ளனர்.

நடிகர் நாசர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகன் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார் என்றும் அவர் உயிர் பிழைப்பாரா என்ற சந்தேகம் இருந்தது என தெரிவித்தார். அந்த விபத்திற்கு பிறகு ஞாபகசக்தியை இழந்து விட்டார் எனவும், ஆனால் அவர் வெறித்தனமான விஜய் ரசிகர் என்பதால் விஜய் பெயர் மட்டும் அவருக்கு ஞாபகம் இருந்தது எனவும் கூறினார்.

எனது மகனின் நெருங்கிய நண்பராக விஜய் ஆனந்த் என்பவர் இருந்தார். அவரை தான் எனது மகன் ஞாபகம் வைத்திருக்கிறார் என முதலில் நினைத்தோம். ஆனால் அதன் பின்னர் தான் நடிகர் விஜயை மட்டுமே ஞாபகம் வைத்திருந்தார் என பின்னர் தான் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த விஜய் தனது மகனின் பிறந்தநாளன்று வீட்டிற்கு வந்த விஜய் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த அளவு மனிதநேயமிக்கவர் விஜய் என்றும் நாசர் தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 194

10

0