வழுக்கை தலையுடன் பட விழாவுக்கு வந்த ஹீரோ? பார்வையாளர்களை ஸ்தம்பிக்கவைத்த சம்பவம்!
Author: Prasad9 August 2025, 5:12 pm
சொட்ட சொட்ட நனையுது…
நிஷாந்த் ரூசோ, வர்ஷினி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. இத்திரைப்படத்தை நவீத் எஸ் ஃபரீத் இயக்கியுள்ளார். ரஞ்சித் உன்னி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை Adler Entertainment என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நிஷாந்த் வழுக்கை தலையுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வழுக்கை தலையுடன் வந்த ஹீரோ
இந்த நிலையில் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் நிஷாந்த் வழுக்கை தலையுடன் கலந்துகொண்டார். இத்திரைப்படத்தில் அவர் வழுக்கை தலையுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அதே கெட்டப்போடு மேடை ஏறினார்.

இதனை தொடர்ந்து அந்த விழாவில் பேசிய அவர், “வழுக்கை என்பது இயற்கைதான். இந்த படத்தை பார்த்த பிறகு யாரும் வழுக்கை தலையை மோசமாக பார்க்க மாட்டார்கள்” என கூறினார். இவ்வாறு இவர் வழுக்கை தலையுடன் இவ்விழாவில் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
