கூடா நட்பால் கேடாய் போன வாழ்க்கை.. பரிதாபமாக முடிந்த நடிகர் பாண்டியன் வாழ்க்கை..!

Author: Vignesh
26 January 2024, 5:00 pm

80-களில் தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில், தான் நாம் கொண்டாடும் நடிகர், நடிகைகள் சிறந்த பாடல்கள் புதிய தொழில்நுட்பம் என எல்லாமே சிறந்ததாக இருந்தது.

அப்படி 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் பாண்டியன். பின்னர் புதுமைப்பெண், ஆண்மை பாவம், நாடோடி தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75-க்கும் பேர் படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில், முக்கிய நடிகராக இருந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

pandiyan

பின்னர் பட வாய்ப்புகள் குறைய இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நடித்தார். இதனிடையே, இவரது கவனம் அரசியல் பக்கத்திற்கு திரும்ப அரசியலில் கூட நட்பு குடிகாரராக இவரை மாற்றியது. முழு நேரம் குடித்து குடிக்கு அடிமையானார். மஞ்சள் காமாலையால், 2008ல் தனது 49 வயதில் பாண்டியன் மரணம் அடைந்தார். அடுத்த நொடி ரகசியங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. அது பாண்டியன் விஷயத்தில் நடந்தது.

pandiyan

யாருக்கும் தெரியாமல் ஒரு வளையல் கடையில் இருந்தவரை உலகறிய செய்து பேரையும் புகழையும் கொடுத்த காலம் கூட நட்பையும், கொடுத்து உயிரையும் எடுத்துக்கொண்டது தான் சோகமான விஷயம். தற்போது பாண்டியன் மனைவி மற்றும் அவரது மகனுடன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!