அசிங்கமா தெரியுது இழுத்து மூடு… “ராயன்” Audio Launch’ல் மனைவியை திட்டிய பிரகாஷ் ராஜ் – வீடியோ!

Author:
29 July 2024, 11:04 am

வில்லன் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டி எடுத்தவர் தான் பிரகாஷ் ராஜ். இவர் தமிழை தாண்டி தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ஏற்ப பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் ஃபேவரைட் வில்லனாக பார்க்கப்பட்டார்.

மேலும், இவர் ஹீரோவாகவும், குணசேத்திர வேடங்களிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் இன்றும்ரசிகர்களின் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் “முத்துப்பாண்டி” என்ற அவரது கேரக்டர் எல்லோருக்கும் பிடித்தமான கேரக்டராகவும் பிடித்தமான வில்லனாகவும் பார்க்கப்பட்டார் .

இது தவிர அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, வேட்டையாடு விளையாடு, ஆதி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். இவர் லலிதா குமாரி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதை அடுத்து போனிவர்மா என்ற பெண்ணை கடந்த 2010 ஆம் ஆண்டு காதலித்து மறுமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது பிரகாஷ்ராஜ் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள “ராயன்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார் . இப்படத்தின் ஆடியோ லான்ச்சில் தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்ட பிரகாஷ்ராஜ் அப்போது மனைவியின் சேலை சற்று விலகி இருப்பதை பார்த்து ஒழுங்காக அணிய சொல்கிறார். அதை கேட்டு கடுப்பான அவரது மனைவி அவர் காதில் என்னவோ கடுமையாக திட்டியது போல் தெரிகிறது. உடனே அவரது முகமே சுளித்து மாறிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!