நடிகர் பிரசன்னாவா இது? வயதான லுக்கில் ஆளு டோட்டலா மாறிட்டாரே!

Author:
3 October 2024, 12:33 pm

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் நடிகை சினேகாவின் கணவராகவும் இருந்து வருபவர் தான் பிரசன்னா . இவர் தமிழ் திரைப்படங்களில் ஒரு சில வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக சினிமாவுல் ஹீரோவாக நுழைந்தார் நடிகர் பிரசன்னா . அதன் பிறகு இவரது நடிப்பில் வெளிவந்த அழகிய தீயே , கஸ்தூரிமான் , கண்ட நாள் முதல் , சாதுமிரண்டா , அஞ்சாதே , கண்ணும் கண்ணும், மஞ்சள் வெயில், நாணயம் ,கோவா, பானா காத்தாடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடித்த போது நடிகை சினேகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த திரைப்படத்தில் சினேகாவுடன் ஏற்பட்ட நட்பு நெருக்கமாக உருமாறியது. அதன் பிறகு சினேகாவை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இதையும் படியுங்கள்: படத்துல விட நிஜத்துல நல்லா ஆடுறாங்களே – பிரியா பவானி ஷங்கருக்கு குவியும் லைக்ஸ்!

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் சினேகா திரைப்படங்களில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சினேகா. இந்த நிலையில் நடிகை பிரசன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

prasanna

அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வயதான தோற்றத்தில் ஆள் டோட்டலா மாறி இருக்கும் இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அட நம்ம பிரசன்னவா இது ? வயதான லுக்கில் அஜித் மாதிரி சூப்பரா இருக்காரு எனக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!