பிரசாந்த் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.. நடிக்காமலேயே மாதம் தோறும் கோடிகளில் வருமானம்..!

Author: Vignesh
5 October 2023, 3:59 pm

90-களில் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய படங்களுக்கு எப்போதும் பெரிய ஓபனிங் இருக்கும். இளம் பெண்களுக்கு பிடித்த சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால், தற்போது பார்ம் அவுட் ஆகியுள்ளார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் விவாகரத்து பெற்றுவிட்டார். பின்பு இவர் நடித்த படங்களும் இவர்களுக்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும், தந்தையின் படத்தில் நடித்தார். தற்போது, திரையுலகில் இவர் நடிப்பு பின்வாங்கினாலும், ஒவ்வொரு மாதமும் இவருக்கு கோடிகளில் வருமானம் வருகிறதாம்.

அதாவது, பிரசாந்த் முன்னணி நடிகராக வலம் வந்தபோது சென்னை டி நகரில் இடம் ஒன்றினை வாங்கி இருந்தார். 17 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தையும் கட்டினார். மேலும், இதில் பல முன்னணி பிராண்டுகளின் ஷோரூங்கள் இடம் பெற்றுள்ளது. அது மட்டும் இன்றி பல்வேறு தொழில்களும் இவர் இன்வெர்ஸ் செய்துள்ளார். இதன் மூலமாக லட்ச கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார். மொத்தத்தில் இது மட்டுமே ஒரு கோடிக்கு மேல் மாதம் ஒன்றிற்கு வருமானமாக வருகிறதாம். இது தவிர 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், மற்றும் சென்னையில் பல வீடுகளும் பிரசாந்துக்கும் அவரின் அப்பாவுக்கும் பல சொத்துக்கள் இருக்கிறதாம். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி 85 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?