விஜய்க்கு கட்சித் தொடங்க எப்படி தைரியம் வந்தது?- ஏடாகூடமாக பதிவிட்ட பிரபல நடிகர்?

Author: Prasad
21 July 2025, 3:16 pm

தவெக தலைவர்…

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில் ஏற்கனவே சூடு பிடித்துக்கொண்டிருந்த தமிழக அரசியல் மேலும் சூடு பிடித்துக்கொண்டது. தனது கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்த அவர், திமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என வெளிப்படையாகவும்  அறிவித்தார். இவ்வாறு தமிழக அரசியலில் விஜய்யின் பல நடவடிக்கைகளும் பேச்சுக்களும் கவனத்தை குவித்துள்ளது. 

Actor r parthiban shared that the reason behind vijay braveness to start a party 

விஜய்க்கு தைரியம் வந்ததற்கு காரணம்!

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “தளபதி விஜய் என் தலைமையில் 16 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். இதன் மூலம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளும் விஜய் தான் மணமக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என அப்போது புரட்டிப் பேசினேன். அப்படிப்பட்ட நல்ல காரியங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு கட்சித் துவங்கும் தைரியம் வந்தது” என கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!