ஒத்த பைசா காசு வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி.. அடேங்கப்பா.. இவ்வளவு நன்றியோட இருக்காரே..!

Author: Vignesh
9 March 2024, 1:43 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

rajini - updatenews360

அவ்வப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து வெளிவரும் சர்ச்சைகளால் அவர் செய்யும் நல்ல விஷயங்கள் கூட பலருக்கும், தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில், யாருக்கும் தெரியாமல் அவர் செய்யும் நல்ல விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் ஈசியாக ரஜினிகாந்து இப்படிப்பட்டவர் தான் என்று கூறி விடுகிறார்கள்.

pandiyan rajini

இந்த நிலையில் முன்னதாக, இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி கலக்கும் ரஜினி ஒரு படத்தில் நடிக்க சுத்தமாக பணம் வாங்காமல் நடித்து கொடுத்து உள்ளார். அதாவது, S.P.முத்துராமன் ரஜினியை வைத்து ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர். இவர்கள் இணைந்தாலே ஹிட் என்ற நிலை தான் அப்போது இருந்தது.

pandiyan rajini

மேலும், முத்துராமனிடம் 14 பேர் கொண்ட டீம் இருந்தது, கேமராமேன், மேக்கப் மேன் என அனைவரும் உள்ளார்கள். இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முத்துராமன் நினைப்பதை ரஜினியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு ரஜினி உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி பாண்டியன் படத்தில் நடித்து இருந்தாராம். அதுவரை எந்தப் படத்தையும் தயாரிக்காத முத்துராமன் பாண்டியன் திரைப்படத்தை சொந்தமாக தயாரித்தாராம். அந்தப் படத்தில், தான் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்து கொடுத்தாராம்.

  • Don't commit Nayanthara to cast in my film... Superstar's sudden order மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?