மகளின் Hoote செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஜினிகாந்த்… டுவிட்டர், பேஸ்புக்கிற்கு இனி கடும் சவால்தான்…!!
Author: Babu Lakshmanan25 October 2021, 5:09 pm
சென்னை : மகள் சவுந்தர்யாவின் Hoote செயலியை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பொதுமக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இதன்மூலம் தங்களின் கருத்துக்களையும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், போட்டியை உருவாக்கும் விதமாக, ஒவ்வொரு நிறுவனங்களும் புதுப்புது அப்டேட்டுகளை செய்து வருகின்றன.
இப்படியிருக்கையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், Hoote எனும் புதிய சமூக வலைதள செயலியை தொடங்கியுள்ளார்.
சென்னையில் நடந்த இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில், மகளுக்கு வாழ்த்து சொல்லி, Hoote செயலியை நடிகர் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பேசிய ஆடியோவில், “சவுந்தர்யா தொடங்கிய Hoote செயலியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி எழுதப் படிக்கத் தெரியாவதவர்களும், சமூக வலைதளங்கள் மூலமாக மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களையும், கருத்துக்களையும் அவர்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. இது டுவிட்டர், பேஸ்புக் போன்று பிரபலமடைய வேண்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0