இந்தியன் 2 நல்லா வந்திருக்கு; விட்டுக் கொடுக்காத நடிகர்; நண்பேன்டா!..

Author: Sudha
22 July 2024, 12:36 pm

கமல் – ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2, கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் நடித்துமுடித்துள்ளார்.அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே கேரளாவிற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ரஜினி சென்றிருந்தார். விழா முடிந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், “கூலி படத்தின் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. வேட்டையன் பட பணிகளும் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” என்றார். இதனிடையே இந்தியன் 2 படம் குறித்த கேள்விக்கு, நன்றாக வந்திருப்பதாக தெரிவித்தார்.

கமல் மற்றும் ரஜினி நீண்டகால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தியன் 2 திரைப்படத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தால் தன் நண்பனை விட்டுக் கொடுக்காத நல்ல மனிதர் என்பதை ரஜினி நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!