விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

Author: Prasad
5 April 2025, 8:02 pm

மனதில் வாழும் கலைஞன்

சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் காலத்தை தாண்டியும் நிற்கும். அவரின் சிந்தனை தெளிக்கும் நகைச்சுவை காட்சிகளை இப்போதும் ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு. 

actor ramki shared vivek memories

இந்த உலகம் உள்ளவரை விவேக் தனது நகைச்சுவை காட்சிகளின் மூலம் என்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ராம்கி, விவேக்குடன் சேர்ந்து பணியாற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 

அவன் படத்தை பார்க்கவே மாட்டேன்…

“நண்பன் என்ற அந்தஸ்தையும் தாண்டி நெருக்கமானவர் விவேக். கடைசி வரைக்கும் நாங்கள் ரொம்ப நெருக்கமாக இருந்தோம். குடும்ப நண்பர் எல்லாம் இல்லை. அதை விடவும் ஜாஸ்தி. மிகவும் அன்பாக இருப்பார். இப்போதெல்லாம் நான் விவேக் சார் படத்தை பார்ப்பது இல்லை. அதனை பார்த்தால் எனக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் வரும். ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

actor ramki shared vivek memories

நிறைய சிரிக்க வைப்பான். படப்பிடிப்பில் நிற்க முடியாத அளவுக்கு சிரிக்க வைப்பான். அந்தளவுக்கு பழகியவர். அவர் டிவியில் காமெடிதான் செய்துகொண்டு இருப்பார். ஆனால் எனக்கு கஷ்டமாக இருக்கும்” என்று மனம் நொந்தபடி அப்பேட்டியில் ராம்கி பகிர்ந்துகொண்டார். 

ராம்கியும் விவேக்கும் இணைந்து நடித்த “விஸ்வநாதன் ராமமூர்த்தி” என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான திரைப்படமாகும். இதில் இருவரும் சேர்ந்து கலக்கிய நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கும்படியாக இருக்கும். 

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?