படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

Author: Prasad
18 June 2025, 4:26 pm

புரட்சி இயக்குனர்

“பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படத்திலேயே சமூக ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்து மிகவும் உயிரோட்டமுள்ள ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து “கர்ணன்’, “மாமன்னன்”, “வாழை” என அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பாரபட்சமின்றி சாடியே அமைந்திருந்தது. ஒரு புறம் இவரது திரைப்படங்களுக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தாலும் மறுபுறம் சிலர் இவரது திரைப்படங்களை கடுமையாக விமர்சிப்பது உண்டு.

actor rs karthik criticize mari selvaraj about his equality

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஆர் எஸ் கார்த்திக் என்பவர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை  குறித்து பகிர்ந்துகொண்டார். 

படத்தில் மட்டுமே புரட்சி?

“மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்து அவர் கர்ணன் திரைப்படத்தை இயக்கியபோது, எனக்கு தெரிந்த நண்பர்கள் துணை நடிகர்களாக அதில் நடித்திருந்தார்கள்.  அப்போது அங்கே நடந்த நிகழ்வு என்னவென்றால், தனுஷ் ஷாட் முடிந்தவுடன் கேரவானுக்குச் சென்று அமர்ந்துவிடுவார். வெயில் காரணமாக மற்ற துணை நடிகர்கள் பலரும் நிழலில் அமர்ந்துகொள்வார்கள். அப்போது மாரி செல்வராஜ் அவர்களை பார்த்து, ‘டேய் வாங்கடா, வந்து வெயில்ல நில்லுங்க, பெரிய மகாராஜா வீட்டுப் பிள்ளைங்க’ என்று சொல்வாராம். இதே தனுஷ் என்று வரும்போது, ‘நீங்க பொறுமையாக வாருங்கள் சார்’ என்று கூறுவாராம். 

actor rs karthik criticize mari selvaraj about his equality

 நான் என்ன கேட்கிறேன் என்றால், நீங்கள் சமூக நீதி பற்றிதானே படம் எடுக்கிறீர்கள். ஹீரோவை ஒரு மாதிரியும் துணை நடிகர்களை ஒரு மாதிரியும் ஏன் நடத்துகிறீர்கள்? இரண்டு பேரையுமே சமமாக பாருங்களேன். இருவரையும் நடிகன் என்று பாருங்களேன். இப்படி இருந்துகொண்டு நீங்கள் எப்படி சமூகநீதி பற்றி பேச முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் இவர் பொறாமையில் பேசுகிறார் என விமர்சித்து வருகின்றனர். நடிகர் ஆர் எஸ் கார்த்திக் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த “பீச்சாங்கை” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!